அமெரிக்காவில் 67 வயது காதலி மீது மோசமான தாக்குதல்: 35 வயது நபர் கூறிய காரணம்
அமெரிக்காவில் 35 வயது நபர் ஒருவர், தனது வயதில் மூத்த காதலி மீது கொதிக்கும் திரவத்தை ஊற்றியதற்காக கைது செய்யப்பட்டார்.
கடுமையான தாக்குதல்
டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது நபர் அலெக்ஸாண்டர் ஆல்டன் மெக்டேவிட். இவர் கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி, அடுக்குமாடி குடியிருப்பில் 67 வயது காதலியுடன் பேசிக்கொண்டிருந்த மெக்டேவிட், அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் மைக்ரோவேவில் இருந்து அகற்றிய ஒரு தட்டில், வெந்துபோன சூடான சூப்பை எடுத்து காதலி மீது ஊற்றியுள்ளார்.
கொதிக்கும் திரவம் பட்டதால் அப்பெண்ணின் வலது தோள்பட்டை, முன்கையில் பரவி, மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முதலில் உதவியை நாடமுடியாத அப்பெண், சில நாட்களுக்குப் பிறகு தாக்குதல் குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில் மெக்டேவிட் தன்னுடன் வசித்து வந்ததாகவும், அவர் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, அவருடன் உறவு நீடித்ததாகவும் கூறியிருக்கிறார்.
130,000 டொலர்கள் பிணை
அதன் பின்னர் உடல் ரீதியான காயத்தால் தாக்குதல், குடும்பத்திற்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை மற்றும் முதியவரை காயப்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் மூலம் மெக்டேவிட் கைது செய்யப்பட்டார்.
தனது காதலி அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமாக பேசியதாகவும், அதனால் கோபப்பட்டு இவ்வாறு செய்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் 130,000 டொலர்கள் பிணையுடன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, குடும்ப வன்முறைத் தாக்குதலுக்காக 2017 மற்றும் 2021 என இருமுறை மெக்டேவிட் தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |