பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து தேம்பி தேம்பி அழுத இளைஞர்: வைரலாகும் வீடியோ
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டம் ஒன்றிற்கு சென்ற போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவரை பார்த்து தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான குஜராத், சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் கையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் புகைப்படங்களை வைத்திருந்தார்.
அப்போது, பிரதமர் மோடியை பார்த்ததும் அந்த இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி தேம்பி அழுதார். அவரை பார்த்த நரேந்திர மோடி, இளைஞரின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி கையெழுத்து போட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.
இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதையடுத்து, சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
सूरत में पीएम मोदीने किया भावुक कलाकार का सम्मान।#Surat #SuratWelcomesModi #SuratNews #surties #PMnarendramodi #PMModiGujaratVisit #PMModiInGujarat #development #NarendraModi pic.twitter.com/ncWOnou0n6
— Sanskar Sojitra (@sanskar_sojitra) March 7, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |