விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் மரணம்.., வீடியோ வெளியாகி அதிர்ச்சி
பேட்மிண்டன் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் மரணம்
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ராகேஷ் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் திடீரென சரிந்து கீழே விழுகிறார்.
பின்னர் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய காலத்தில் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது பெரும் கவலையை தூண்டியுள்ளது.
షటిల్ ఆడుతూ గుండెపోటుతో కుప్పకూలి 25 ఏళ్ల యువకుడు మృతి
— Telugu Scribe (@TeluguScribe) July 28, 2025
నాగోల్ స్టేడియంలో షటిల్ ఆడుతుండగా ఒక్కసారిగా కుప్పకూలి పడిపోయిన రాకేష్
ఆసుపత్రికి తరలించగా.. అప్పటికే మరణించినట్టు నిర్ధారించిన వైద్యులు
మృతుడు ఖమ్మం జిల్లా తల్లాడ మాజీ ఉప సర్పంచ్ గుండ్ల వెంకటేశ్వర్లు కుమారుడు గుండ్ల… pic.twitter.com/v3rVaXM3gt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |