பிரித்தானியாவில் தண்டவாளத்தில் சடலம் இருப்பதை கண்ட இரயில் ஓட்டுனர்!
பிரித்தானியாவில் 22 வயதான இளைஞர் இரயில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கூறு ஆய்வாளர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
22 வயது இளைஞரான யூசுப் அப்பாஸ் காதிம், எசக்ஸில் உள்ள ஹைதி இரயில் நிலையத்தில் வந்த இரயில் மோதியதில் உயிரிழந்தார்.
அவர் தண்டவாளத்தில் சடலமாக கிடப்பதை இரயில் ஓட்டுனர் பார்த்தார், இதன் பின்னர் இது பொலிசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலை 6.37 மணிக்கு நடந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் இரயில் மோதியதில் படுகாயமடைந்து யூசுப் உயிரிழந்தார் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எசக்ஸின் உடற்கூறு ஆய்வாளர் மிச்சேல் பிரவுன், யூசுப் மரணம் தொடர்பான விசாரணையை நேற்று முன் தினம் மீண்டும் தொடங்கியுள்ளார்.
விசாரணையின் போது யூசப்பின் முழு மருத்துவ அறிக்கையை அவர் பார்ப்பார், மேலும் யூசுப் மனநல பிரச்சினை தொடர்பாக எதாவது சிகிச்சையை பெற்றாரா என்பதை அவர் தீர்மானிக்கவுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பொலிசாரும், மருத்துவ குழுவினரும் அங்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர், ஆனால் அதற்குள் யூசுப் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        