காதலித்த 2 பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்
இளைஞர் ஒருவர் தான் காதல் செய்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.
ஒரே நேரத்தில் திருமணம்
இந்திய மாநிலமான தெலங்கானா, ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஜெய்னூர் மண்டலம் அத்தேசரா கிராமத்தைச் சேர்ந்தவர் அத்ரம் சத்ருஷாவ். இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆவார்.
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுடன் பழகி 1 வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரண்டாவதாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்த அத்ரம் சத்ருஷாவ், 15 நாட்களுக்கு முன்பாக அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இந்த சம்பவம் முதல் காதலிக்கு தெரியவரவே அவர் ஆலோசனை மையத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கு, இரண்டு பெண்களையும் சமாதானம் செய்தபோது இருவரும் அத்ரம் சத்ருஷாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, இரு பெண்களின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர் இரு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தாலி காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |