கூகுள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்கும் இளைஞர்! லட்சங்களில் வருமானம்
தகவல் தொழில்நுட்ப துறையில் பலரது கனவான கூகுள் நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் முனாப் கபாடியா.
இந்தியாவின் மும்பையை சேர்ந்தவர் முனாப் கபாடியா, எம்பிஏ பட்டதாரியான இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, இதற்காக அமெரிக்காவும் சென்றுள்ளார்.
ஆனாலும் ஏதோ ஒரு திருப்தி இல்லாததால் சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் வேலையை விட்டு விட்டு இந்தியா வந்துள்ளார்.
என்ன செய்யலாம் என எண்ணிக்கொண்டிருந்த போதே, தன்னுடைய அம்மாவின் சமையல் திறமை நினைவுக்கு வந்துள்ளது.
சமையல் நிகழ்ச்சிகளை பார்த்து அப்படியே ருசியுடன் சமைப்பதில் கில்லாடி முனாப் கபாடியா தாயார்.
இதையே தொழிலாக்க நினைத்து, The Bohri Kitchen என்ற உணவகத்தை தொடங்கினார்.
இங்கு சமோசா என்றால் பிரபலம், நீண்ட வரிசையில் நின்று கூட மக்கள் சமோசாவை வாங்கி செல்கின்றனர்.
சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இவர் உணவகத்தின் சமோசாவுக்கு அடிமையாம், கடந்தாண்டு தொடங்கிய உணவகத்தின் வருமானம் 50 லட்ச ரூபாயாம்.
5 கோடி வரை வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்குடன் உழைத்துக்கொண்டிருக்கிறார் முனாப் கபாடியா, இவரது விடாமுயற்சிக்கு பரிசாக போர்ப்ஸ் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |