தீவிர சிகிச்சை பிரிவில் இறப்பவர்கள்... கொரோனா நோயாளிகள் தொடர்பில் பிரித்தானிய மருத்துவர்கள் கவலை
பிரித்தானியாவில் தடுப்பூசி மறுப்பாளர்களான இளையோர்களே அதிகமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் கண்டு வருகிறது. விடுமுறை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கும் அபாயம் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.
ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடும்விதத்தில் இருக்கிறது, புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிப்பது என்ற தகவலும் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் போராடுவோர் பலரும் இளையோர்கள் எனவும், பெரும்பாலானவர்கள் தடுப்பூசி மறுப்பாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு என முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிப்போர் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சை நாடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 80% பேர்கள் உயிர் பிழைக்க போராடிவருவதாகவும் அதில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேலும் தாமதிப்பது உயிருக்கே உலைவைக்கும் என குறிப்பிட்டுள்ள மருத்துவர் ஒருவர், மக்கள் கண்டிப்பாக தங்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.