அஸ்வினை பார்த்ததும் ஓடி வந்து காலில் விழுந்த வீரர்! பின்னர் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்
அவுஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தமிழக வீரர் அஸ்வினைப் பார்த்ததும் ஓடி வந்து காலில் விழுந்த இளம் வீரரின் செயல் பேசுபொருளாகியுள்ளது.
டெஸ்ட் தொடர்
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
இடக்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக பந்துவீசக்கூடியவர் என்பதால், அவரை சமாளிக்க மகேஷ் பிதியா என்ற வீரரை அவுஸ்திரேலியா வலைப்பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டது. ஏனெனில் அஸ்வினைப் போலவே பந்துவீசக்கூடியவர் மகேஷ் பிதியா.
Mahesh Pithiya grew up being called “Ashwin” owing to his uncanny impersonation of his idol @ashwinravi99 & he ended up ‘playing’ Ashwin for Australia in their first training session on tour & making a big impression on Steve Smith. Here’s how #IndvAus https://t.co/GnAd63DFN6 pic.twitter.com/BgNwOWGDC6
— Bharat Sundaresan (@beastieboy07) February 3, 2023
@Cricket.com.au/ LouisDBCameron
மானசீக குரு அஸ்வின்
இந்த நிலையில் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு அஸ்வின் வந்துள்ளார். அதனைப் பார்த்த மகேஷ் பிதியா ஓடிச் சென்று அஸ்வினின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். ஆனால் உடனே அவரை தூக்கிய அஸ்வினை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மகேஷ் பிதியா கூறுகையில், 'இன்று எனது மானசீக குருவிடம் (அஸ்வின்) ஆசீர்வாதம் பெற்றேன். அவரைப் போல் பந்துவீச வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு. அவர் வலைக்குள் நுழையும்போது நான் அவரை சந்தித்தபோது, அவருடைய பாதங்களைத் தொட்டு ஆசி வாங்கினேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்து அவுஸ்திரேலியர்களுக்கு நான் சரியாக என்ன பந்து வீசுகிறேன் என்று கேட்டார். விராட் கோலியும் என்னைப் பார்த்து சிரித்து, கை விரலை உயர்த்தி, எனக்கு வாழ்த்துக் கூறினார்' என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை 6 முறை வலைப்பயிற்சியில் மகேஷ் வெளியேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@PTI