உயிரிழந்த முதல் கணவன்! மறுமணம் செய்து கொண்ட இலங்கை தமிழ்ப்பெண் தற்கொலை... கர்ப்பமாக இருந்த நிலையில் எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் கர்ப்பமாக இருந்த இலங்கை தமிழ்ப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் ஜீவிதா (31). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார்.
இதனையடுத்து மனைவியை விவாகரத்து செய்த, விருப்பாட்சி இலங்கை முகாமை சேர்ந்த அருள்மோகன் (37) என்பவரை 2-வதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜீவிதா திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஜீவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் விருப்பாட்சி இலங்கை முகாமில் உள்ள தனது வீட்டில் ஜீவிதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.