திரைப்படங்களில் பிரபலமாவதற்கு முன் ஷாரூக்கான் எப்படி இருக்கிறார் பாருங்கள்
இந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். இன்றைக்கு அவர் பாலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர் என்றாலும், எல்லோருமே எளிமையாக வாழ்க்கையைத் துவக்கியவர்கள்தானே!
இந்நிலையில், திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் எடுக்கப்பட்ட ஷாரூக்கானின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மற்றொரு மூத்த நடிகர்.
திரைப்படங்களில் பிரபலமாவதற்கு முன்...
1988ஆம் ஆண்டு, Fauji என்னும் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானார் ஷாரூக்கான். பின்னர், சர்க்கஸ், இடியட் ஆகிய தொடர்களில் நடித்த அவர் 1992ஆம் ஆண்டு தீவானா என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
என்றாலும், அவர் நடித்த பாஸிகர் மற்றும் Darr ஆகிய த்ரில்லர் திரைப்படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தன.
இந்நிலையில், மூத்த நடிகர்களில் ஒருவரான அமர் தல்வார் என்பவர் சமீபத்தில் ஷாரூக்கானின் புகைப்படங்கள் சிலவற்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிந்துள்ளார்.
அவை, ஷாரூக்கான் திரைத்துறையில் நுழைவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும்.
தான் பழைய புகைப்படங்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த புகைப்படங்கள் கண்ணில் பட்டதாகக் கூறி அவற்றை சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமர் தல்வார்.
இந்த அமர் தல்வார் யார் என்று தெரியுமா? 90களில் மிகவும் பிரபலமான ஷாந்தி என்னும் தொடரில், ராஜ் ( Raj ‘GJ’ Singh) என்னும் அவரது கதாபாத்திரம் மிகவும் கவனம் ஈர்த்த ஒரு கதாபாத்திரமாக அமைந்தது.
அந்த தொடரை பார்த்தவர்கள், அவரை ராஜ் ஆக இப்போதும் நினைவுகூருவார்கள் என்பதை மறுக்கமுடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |