என் சாவுக்கு இவர் தான் காரணம்! விஷம் அருந்தி...வாக்குமூலமாக வீடியோவை வெளியிட்ட பெண்
தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெண் செல்வமணி. இவரும் சதீஷ் என்ற இளைஞனும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் உறவினருக்கும் ஊர்மக்களுக்கும் தெரியவந்ததால், செல்வமணியை சதீஷ் புறக்கணித்துள்ளார்.
இதனால், செல்வமணி காதலித்த போது, இருவரும் நெருக்கமாக இருந்த ஆதாரங்களை எடுத்து சென்று, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், தனக்கு நியாயம் கேட்டு சதீஷ் வீட்டுக்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு சதீஷின் உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
வீட்டு முன்பு செல்வமணி தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று எண்ணி, விஷம் அருந்திய செல்வமணி, தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொலிசார் சதீஷ் மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷம் அருந்திய செல்வமணிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.