படுகாயமடைந்த இளம் சுவிஸ் விளையாட்டு வீராங்கனை: வெளியாகியுள்ள துயரச் செய்தி
சுவிட்சர்லாந்தில், விபத்தொன்றில் படுகாயமடைந்த இளம் சைக்கிள் பந்தய வீராங்கனை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் சுவிஸ் விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்
சுவிஸ் சைக்கிள் பந்தய வீராங்கனையான மியூரியல் (Muriel Furrer, 18), சூரிச்சில் சைக்கிள் பந்தயம் ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் விபத்தொன்றை சந்தித்தார்.
அந்த இடம் ஈரமாக இருந்துள்ளதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. என்றாலும், என்ன நடந்தது என்பதைக் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
தலையில் பலத்த காயமடைந்த மியூரியல் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Our hearts are broken, we have no words
— Swiss Cycling (@swisscycling) September 27, 2024
It is with a heavy heart and infinite sadness that we have to say goodbye to Muriel Furrer today. We are losing a warm-hearted and wonderful young woman who always had a smile on her face. There is no understanding, only pain and sadness. pic.twitter.com/tFy9nAb1BS
இந்நிலையில், சூரிச் பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மியூரியல், நேற்று மரணமடைந்துவிட்டதாக சைக்கிள் பந்தய அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரகாசமான எதிர்காலம் உள்ளது என கருதப்பட்ட ஒரு இளம் சைக்கிள் பந்தய வீராங்கனையின் வாழ்வு, 18 வயதிலேயே முடிந்துபோன விடயம் பெரும் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |