ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: சில புதிய தகவல்கள்
A British young woman died after a homeless man allegedly stabbed her in the chest at a train station in Germany: ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண் ஒருவர் வழக்கில், அவர் வீடில்லாமல் தெருக்களில் வாழ்ந்துவந்த ஒருவரால் கொல்லப்பட்டதாக நீதிமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆகத்து மாதம் 30ஆம் திகதி, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
சில புதிய தகவல்கள்
அந்தப் பெண்ணின் பெயர் ரெபேக்கா புல்லக் (Rebecca Bullock, 31). ரெபேக்கா, இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷையரிலுள்ள Whitchurch என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெபேக்கா, மார்பில் கத்தியால் குத்தப்பட்டதால், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் பலியானதாக நீதிமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரெபேக்காவைக் கத்தியால் குத்தியவர் பெயர் தாமஸ் (Thomas A, 27) என்றும், அவர் ஜேர்மனியில் வீடில்லாமல் தெருக்களில் வாழ்ந்துவந்த ஒரு நபர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தி சன் பத்திரிகை தெரிவிக்கிறது.