விபத்தில் கணவர் பலியானதால் உயிரைவிட்ட இளம்பெண்
தமிழக மாவட்டம் திருச்சியில் கணவர் விபத்தில் பலியானதால், துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விவசாய தம்பதி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (34). விவசாயியான இவரது மனைவி கலாவும் (27) விவசாயம் செய்து வந்துள்ளார்.
சிலம்பரசன் தனது நண்பர் குபேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். சக்தி முருகன் என்பவர் (56) முசிறி - துறையூர் சாலையில் காரில் சென்றுள்ளார்.
அவரது கார் குபேந்திரன், சிலம்பரசன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குபேந்திரன் காயத்துடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சிலம்பரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபரீத முடிவெடுத்த மனைவி
அதன் பின்னர் மருத்துவமனைக்கு வந்த சிலம்பரசனின் மனைவி கலா, தனது கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
இதனையடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் கடும் வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து கலா உயிரை மாய்த்துக் கொண்டார்.
தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |