வன்முறைக்குத் தப்பி ஜேர்மனிக்கு வந்த இளம்பெண்: கிடைத்த எதிர்பாராத அன்பும் ஆதரவும்
தன் நாட்டில் நிகழ்ந்துவரும் வன்முறைக்குத் தப்பி மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு எதிர்பாராத அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.
வன்முறைக்குத் தப்பி வந்த இளம்பெண்ணுக்கு கிடைத்த அன்பும் ஆதரவும்
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள Guinea நாட்டிலிருந்து Aissatou என்ற இளம்பெண் ஜேர்மனிக்கு வரும்போது அவருக்கு 16 வயது மட்டுமே. தன் நாட்டில் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதலால் ஏற்பட்டுள்ள வன்முறைக்குத் தப்பி தனியாக ஜேர்மனிக்கு வந்தார் இளம்பெண்ணான Aissatou.
அறியா வயது, துணைக்கு பெற்றோரும் இல்லை என்ற நிலையில் ஜேர்மனிக்கு வந்த Aissatouவுக்கு ஆதரவு கொடுத்தார் Katharina. அடிப்படை தேவைகளுக்கு உதவியது மட்டுமின்றி, அவருக்கு தன்னார்வலர் பாதுகாவலராகவும் (volunteer legal guardian) செயல்பட்டுவருகிறார் Katharina.
Akinda என்னும் தொண்டு நிறுவனம், ஜேர்மனிக்கு பெற்றோர் துணையில்லாமல் தனியாக வரும் அகதிகளுக்கு தன்னார்வலர் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்து உதவிவருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த Ronald Reimann, தனியாக வரும் இந்தப் பிள்ளைகளுக்கு இப்படி தன்னார்வலர் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்து கொடுப்பதால், அது இந்த சின்னப் பிள்ளைகளுக்கு இப்போது மட்டுமின்றி ஜேர்மனியில் வாழும் நிலையில், பின்னாட்களிலும் பலவகையிலும் மிகவும் உதவியாக உள்ளது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |