இறந்தவர்களுடன் பேசுவதாக கூறிய இளம்பெண்... நம்பி ஏமாந்ததுடன் கம்பியும் எண்ணும் பிரான்ஸ் மேயர்
தங்கள் மனைவிகளை மாற்றிக்கொள்வதற்காக ஏராளமானோர் படையெடுக்கும் நகரம் என பெயர் பெற்ற பிரெஞ்சு நகரங்களில் ஒன்று, புதுவித ஊழல் ஒன்றில் சிக்கியுள்ளது.
இறந்தவர்களுடன் பேசுவதாக கூறிய இளம்பெண்...
பிரெஞ்சு நகரமான Agdeவின் மேயர் கில்ஸ் (Gilles d’Ettore). தங்கள் மனைவிகளை மாற்றிக்கொள்பவர்களுக்கு பிரபலமான அந்நகரில், அழகான இளம்பெண் ஒருவரை சந்தித்த கில்ஸ், அவர் இறந்தவர்களுடன் பேசும் அற்புத சக்தி படைத்தவர் என கேள்விப்பட்டுள்ளார். அந்த இளம்பெண்ணின் பெயர் சோபியா (Sophia Martinez). இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போய்விட்டது போலிருக்கிறது.
இறந்துபோன தன் தந்தையுடன் பேசவேண்டும் என கில்ஸ் சோபியாவிடம் கேட்க, அதற்காக ஏற்பாடு செய்வதாகக் கூறிய சோபியா, கில்ஸை தன்னுடன் அறை ஒன்றிற்கு அழைத்துச் செல்ல, திடீரென சோபியாவின் குரல் மாறியுள்ளது. அப்படியே சோபியா தன் தந்தையின் குரலில் பேசுவதைக் கண்டு ஆச்சரியத்தில் பேச்சு மூச்சற்றுப் போனார் கில்ஸ்.
ஆக, அப்பாவுடன் பேசவேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் கில்ஸ் சோபியாவைத் தொடர்புகொள்ள, தொலைபேசி மூலமாகவும் தன் தந்தை பேசுவதைக் கேட்டுள்ளார் கில்ஸ்.
துவங்கிய மோசடி
சில நாட்களுக்குள், கில்ஸிடம் அவரது தந்தை மட்டுமின்றி, தேவதைகளும் பேசத் துவங்கியுள்ளார்கள். அவர்கள் கில்ஸிடம், உனக்கு உதவி செய்யும் சோபியாவுக்கு நீயும் உதவி செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
அதை அப்படியே ஏற்றுக்கொண்ட கில்ஸ், சோபியாவின் உறவினர்கள் பலரை நகர கவுன்சிலில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார். சோபியாவின் குடும்பத்தினரை வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் பலவற்றிற்கு அனுப்பியுள்ளார். சோபியாவின் வீட்டை புதுப்பித்துள்ளார்.
ஆனால், அதற்கெல்லாம் அவர் பயன்படுத்திய பணம் அரசின் பணம். ஆகவே, கில்ஸை கைது செய்த பொலிசார், அவரை ஏமாற்றியதாக சோபியாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
சோபியாவின் நிலைமை சிறை சென்றபின் மோசமாகிவிட்டது. வெளியே இருக்கும்போது, தனக்கு அற்புத சக்தி இருப்பதாகவும், அதை மருத்துவர்கள் கூட உறுதி செய்ததாகவும் கூறிவந்தார் அவர். ஆனால், சிறையில் அவரை சூனியக்காரி என்று நம்பும் சக பெண் கைதிகள் அவரை அடித்து துவம்சம் செய்ய, வேறு வழியில்லாமல், அவரை தனிமைச் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |