உயிரை மாய்த்துக் கொள்ள வந்தபோது.. ரயில் தண்டவாளத்தில் அசந்து தூங்கிய இளம்பெண்
காதல் பிரச்சனையால் உயிரை மாய்த்துக் கொள்ள வந்த இளம்பெண், தண்டவாளத்தில் அசந்து தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தண்டவாளத்தில் தூங்கிய இளம்பெண்
இந்திய மாநிலமான பீகார், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹரியில் இருந்து முசாபர்பூர் வரை ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயிலின் லோகோ பைலட் திடீரென நடுவழியில் ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்த அவர் சாதுர்யமாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தி தக்க சமயத்தில் ரயிலை நிறுத்தினார்.
ரயிலின் லோகோ பைட் தகுந்த நேரத்தில் ரயிலை நிறுத்தியதால் விபரீத முடிவு எடுக்க முயன்ற பெண் காப்பாற்றப்பட்டார்.
பின்னர், ரயிலை நிறுத்தியதால் சக பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்தனர். தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்ணை சக பயணிகள் எழுப்பி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் அந்த பெண்ணிடம் விசாரிக்கும் போது குடும்ப பிரச்சனையின் காரணமாக இளம்பெண் விபரீத முடிவு எடுக்க வந்தது தெரியவந்துள்ளது. தன்னுடைய காதலை குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாததால் இந்த முடிவு எடுத்துள்ளார்.
பின்னர், என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? நான் சாகவேண்டும் என்று அவர் அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |