ரயில் பாதையில் அமர்ந்திருந்த இளம்பெண்... வேகமாக வந்த ரயில்: வாழ்வையே மாற்றிய அந்தத் தருணம்
தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ரயில் பாதையில் இறங்கி அமர்ந்தார் ஒரு இளம்பெண்.
வேகமாக ரயில் வந்துகொண்டிருந்தது. ஆனால், ரயிலின் சாரதி அவரது வாழ்வையே மாற்றிவிட்டார்.
ரயில் பாதையில் இறங்கி அமர்ந்த இளம்பெண்...
செவிலியராகப் பணிபுரியும் சார்லட் (Charlotte Lay, 33) கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு, ஒரு நாள் சீருடையுடன் பணிக்குப் புறப்பட்ட சார்லட் இங்கிலாந்தின் Bradfordஇலுள்ள Crossflatts ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார்.
திடீரென என்ன நினைத்தாரோ தெரியாது, தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து ரயில் பாதையில் இறங்கி அமர்ந்துகொண்டார் சார்லட்.
அடுத்த ரயில் வரும் நேரம் அது. ரயிலும் வந்தது.
Image: Georgie Beck Photography / SWNS
ஆனால், அந்த ரயிலின் சாரதியான டேவ் (Dave Lay, 47), சார்லட்டைக் கவனித்துவிட்டார்.
சாதுர்யமாக ரயிலை நிறுத்திய டேவ், சார்லட்டின் அருகில் சென்று முழங்காலிட்டு அமர்ந்துகொண்டு, அவருடன் அரை மணி நேரம் பேசினார்.
அந்த தருணம் சார்லட்டின் வாழ்வையே மாற்றிவிட்டது. டேவுடன் ரயிலில் ஏறிய சார்லட் மன நல ஆலோசனை பெற சம்மதம் தெரிவிக்க, அடுத்த ரயில் நிலையத்தில் அவர் மன நல மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வாழ்வையே மாற்றிய மனிதர்
Image: NHS West Yorkshire ICB / SWNS
மறுநாள் முகநூலில் டேவைத் தேடிக் கண்டுபிடித்த சார்லட், அவர் தனக்குக் காட்டிய இரக்கத்துக்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் இருவரும் நண்பர்களாக பழகத் துவங்கி, நட்பு காதலாகி, மூன்று ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
இப்போது தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
அன்று தன்னிடம் டேவ் பேசிய அரைமணி நேரம் தன் வாழ்வையே மாற்றியதாகக் கூறும் சார்லட், எந்த பயிற்சியும் இல்லாமலே தன்னிடம் பேசி தன் மனதை மாற்றிய டேவை எண்ணும்போது, நாமும் கூட மற்றவர்களுக்கு உதவமுடியும் என்பதைக் காட்டுவதற்காகவே தனது கதையை கூறுவதாக தெரிவிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |