மாதவிடாய் வலிக்காக கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
பிரித்தானியாவில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியைத் தாங்கமுடியாத ஒரு இளம்பெண், தனது தோழிகள் சிலரைப் பின்பற்றி சிகிச்சை ஒன்றை எடுத்துக்கொண்டார்.
மாதவிடாய் வலிக்கு கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்ட பெண்கள்
இங்கிலாந்திலுள்ள Immingham என்னுமிடத்தைச் சேர்ந்த லைலா கான் (Layla Khan, 16) என்னும் இளம்பெண், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் கடும் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்துள்ளார்.
லைலாவின் தோழிகள் சிலர், தாங்கள் மாதவிடாயின்போது கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்டதாகவும், அது வலியை சமாளிக்க உடனடியாக உதவியதாகவும் கூறியுள்ளனர்.
GOFUNDME
வாழ்க்கையில் நீண்ட காலம் அனுபவிக்கவேண்டிய கஷ்டத்தை சீக்கிரமாக ஒரு மாத்திரை சரி செய்கிறதா என ஆச்சரியப்பட்ட லைலா, கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 25ஆம் திகதிமுதல் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் துவங்கியுள்ளார். அவரது வயிற்று வலியும் கணிசமான அளவுக்குக் குறையவே மகிழ்ச்சியடைந்துள்ளார் லைலா.
துவங்கிய பிரச்சினை
ஆனால், 10 நாட்களுக்குப் பிறகு, இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, லைலாவுக்கு கடும் தலைவலியும், 8ஆம் திகதி வாந்தியும் துவங்கியுள்ளன.
டிசமபர் மாதம் 10ஆம் திகதி லைலாவுக்கு வாந்தி அதிகரித்துள்ளது. ஆகவே, மறுநாள் லைலாவை அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
GOFUNDME
ஆனால், மறுநாள் மருத்துவமனைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த லைலா, கழிவறைக்குச் செல்ல முயல, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்திருக்கிறார். அவரது கால்கள் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக லைலாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பல பரிசோதனைகளுக்குப் பிறகு, லைலாவின் மூளையில் இரத்தக் கட்டி உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மூளைச்சாவு
டிசம்பர் மாதம் 13ஆம் திகதி, அதாவது, கடந்த புதன்கிழமை, லைலா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாதவிடாய் வலிக்காக மகள் எடுத்துக்கொண்ட மாத்திரை மூளைச்சாவு வரை கொண்டு சென்றுவிட்டதை அறிந்து லைலாவின் குடும்பம் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்தாலும், அவளது உடல் உறுப்புகளை தானம் செய்ய லைலாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
ஐந்து உயிர்களைக் காப்பாற்றிவிட்டு, மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள் லைலா.
GOFUNDME
என்ன பிரச்சினை?
அதாவது, கருத்தடை மாத்திரை என்பது, ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டோஜன் என்னும் பெண் ஹார்மோன்கள் கொண்ட கலவை ஆகும்.
அது கரு உருவாவதைத் தடுக்கும் கருத்தடை மாத்திரையாக செயல்படும் அதே நேரத்தில், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் என்னும் பிரச்சினைகளுக்கான சிகிச்சைக்காகவும் அதை பயன்படுத்த முடியும்.
ஆனால், இந்த கருத்தடை மாத்திரை, இரத்தக் கட்டிகளை உருவாக்கக்கூடும்!
துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையைத் துவங்கும் நேரத்திலேயே, அந்த மாத்திரை லைலாவின் உயிரைப் பறிக்க காரணமாக அமைந்துவிட்டது துயரம்தான்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |