ஆடம்பர செலவு செய்யாமல் 24 வயதில் ரூ.84 லட்சம் சேமித்த இளம்பெண்.., 40 வயதில் வீடு வாங்க இலக்கு
24 வயதான பெண் ஒருவர் ஆடம்பரமாக செலவு செய்யாமல் சிக்கனமாக இருந்து ரூ.84 லட்சம் சேமித்துள்ளார்.
வீடு வாங்க இலக்கு
தற்போதைய காலத்தில் பலரும் ஆசைக்காகவும், அழகுக்காகவும் ஆடம்பர செலவுகளை அதிகமாக செய்கிறோம். முக்கியமாக திருமணம் முதல் எந்த விடயத்திற்கு ஆடம்பரத்தை தான் நினைக்கிறோம்.
ஆனால், இங்கு 24 வயது இளம்பெண் ஒருவர் தனது சிக்கனமான சேமிப்பின் மூலம் ரூ.84 லட்சம் சேமித்துள்ளார். இவரது நிதி சேமிப்பு முறையும், நிதி இலக்குகளை அடைய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.
மியா மெக்ராத் என்ற 24 வயது பெண் ஒருவர் பேஷன் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே சேமிப்பை தொடங்கியுள்ளார். பல்கலைக்கழகங்களில் படிக்கும் காலத்தில் தேவையற்ற செலவுகள் அனைத்தையும் தவிர்த்து சேமித்து வைத்துள்ளார்.
படிக்கும் காலங்களில் கூட மதிய உணவை வீட்டில் இருந்தே எடுத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், காபியை பாட்டில்களில் எடுத்துச்செல்வது, சிக்கனமாக ஷாப்பிங் செய்வது போன்ற விடயங்களை செய்து வந்துள்ளார்.
இவர், தினமும் காலை உணவாக முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இவருடைய இலக்கு என்னவென்றால் 40 வயதிற்குள் வீடு வாங்க வேண்டும் என்பது தான். அதற்காக ரூ.11 கோடி சேமிப்பதையே அவர் இலக்காக வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |