தண்ணீர் என்றாலே பயம்! நீர் அருந்தாமல், கண்ணீர் விடமுடியாமல் வாழும் 15 வயது இளம்பெண்... காரணம் இதுதான்
அமெரிக்காவில் உடலில் தண்ணீர் பட்டால் பாதிக்கப்படும் வினோத நோயால் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
டக்ஸான் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் அபிகெயில் பெக்எ என்பவர் தான் அத்தகைய ஒவ்வாமையால் அவதியடைந்து வருகிறார். அதன்படி இவர் மீது தண்ணீர் பட்டாலே வலியுடன் கூடிய அரிப்பு ஏற்பட்டு விடும்.
இவ்வளவு ஏன், கண்ணீர் பட்டால் கூட முகம் சிவந்து விடுமாம். இதனால், அந்தப் பெண் குளிக்கவோ, சோகத்தில் அழவோ முடியாது. பிறக்கும்போது மற்ற எல்லோரையும் போல சராசரி குழந்தையாகத் தான் இருந்தார் அபிகெயில் பெக்.
12 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டில் 13 வயதில் இருந்து தான் இத்தகைய அரிய பிரச்சினைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. அதே சமயம், தண்ணீர் பட்டாலே அலர்ஜி என்ற தீவிரத்தன்மை கடந்த மாதம் தான் உறுதி செய்யப்பட்டது.
ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ
பொதுவாக மனிதர்கள் உடம்பில் ஆசிட் பட்டால் எப்படி எரிச்சல் ஏற்படுமோ, அதுபோல அபிகெயிலுக்கு தண்ணீர் பட்டாலே எரிச்சலும், அரிப்பும் ஏற்படுமாம். இதனால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதுவே, குடிநீர் என வருகிறபோது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தண்ணீர் குடித்ததே இல்லையாம்.
குடிநீர் அருந்தினால் உடனடியாக வாந்தி வரும் என்கிறார் அபிகெயில். குடிநீருக்குப் பதிலாக தினசரி மாதுளம் பழச்சாறு அல்லது தண்ணீர் சத்து குறைவாக உள்ள பிற சத்து பானங்களை இவர் அருந்தி வருகிறார். உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்வதில்லை என்பதால், அதை ஈடு செய்வதற்கு மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்.
அபிகெயில் கூறுகையில், எனது கண்ணீர் கூட எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. முகம் சிவந்து போய், கடுமையாக எரிச்சல் ஏற்பட்டு விடும். தண்ணீர் அருந்தினால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும் என கூறியுள்ளார்.
அபிகெயில் முன்னரெல்லாம் தன் பிரச்சனையை பற்றி வெளியில் பேசமாட்டார். ஆனால் இப்போது தன் நிலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் அதைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ளவும் இவ்வாறு செய்வதாக கூறுகிறார்.