மேக்ரான் புதிதாக தேர்வு செய்துள்ள அமைச்சர் மீது இளம்பெண்கள் புகார்: அமைச்சரவை அமைப்பதில் பிரச்சினை
மேக்ரான் புதிதாக அமைக்க இருக்கும் அமைச்சரவைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் செய்துள்ளதைத் தொடர்ந்து, அமைச்சரவை அமைக்கும் விடயத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேக்ரான், ஒற்றுமை மற்றும் உடற்குறைபாடு கொண்டோருக்கான அமைச்சராக Damien Abad என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால், Abad தங்களை வன்புணர்ந்ததாக இரண்டு பெண்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள Abad, arthrogryposis என்ற குறைபாடு கொண்டவராவார். அந்த குறைபாடு தனக்கு இருப்பதால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களை தன்னால் செய்யவே முடியாது என்று கூறியுளார் அவர்.
எதிர்க்கட்சியினரோ, அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது. நாம் பெண்களுடைய பிரச்சினைகளுக்கு செவிகொடுக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்கும் வகையில், Abadஐ அமைச்சரவையில் இருந்து அகற்றியே ஆகவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.