நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட இளம்பெண்கள்! வெளியான பரபரப்பு தகவல்

Mumtaz Tamil Cinema Tamil nadu
By Sivaraj May 11, 2022 05:26 AM GMT
Report

பிரபல நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், 17 வயது சிறுமி உட்பட இரண்டு பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள எச் பிளாக் குடியிருப்பு ஒன்றில், நடிகை மும்தாஜ் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இருந்து தொலைபேசி வாயிலாக பொலிசை தொடர்புகொண்ட இளம்பெண் ஒருவர், மும்தாஜ் தன்னை மிரட்டி கொடுமைப்படுத்துவதாக அதிர்ச்சி புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மும்தாஜின் வீட்டிற்கு விரைந்த பொலிசார், புகார் தெரிவித்த இளம்பெண்ணுடன் அவரது சகோதரியான 17 வயது சிறுமியையும் மீட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மும்தாஜின் வீட்டில் இருவரும் 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாகவும், தங்களை மும்தாஜ் கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் பக்கத்து வீட்டில் வேலைக்கு சேர முயன்றபோது மும்தாஜின் ஆட்கள் தங்களை மிரட்டியதாகவும் கூறினர்.

நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட இளம்பெண்கள்! வெளியான பரபரப்பு தகவல் | Young Women Complaint On Actress Mumtaz

அதன் பின்னர் அவர்களின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, குறித்த பெண்கள் இருவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், சமீபகாலமாக கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அப்பெண்கள் அவரிடம் புகார் அளித்ததாகவும் தெரிய வந்தது.

நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட இளம்பெண்கள்! வெளியான பரபரப்பு தகவல் | Young Women Complaint On Actress Mumtaz

அப்பெண்களின் தாயாரின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரையும் காப்பகத்தில் சேர்த்தனர். குறித்த இரு பெண்களும் 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்கள் என்றால், மைனர்களாக இருக்கும்போதே வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US