இளம் கோடீஸ்வரர்... சம்பாதித்ததில் சரிபாதி தானம் செய்பவர்: அவரது மொத்த சொத்து மதிப்பு
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவரான நிகில் காமத் கடந்த 2010 முதல், தாம் சம்பாதிப்பதில் சரிபாதியை தானமாக அளித்து வருகிறார்.
சம்பாதிப்பதில் சரிபாதியை தானம்
உலக கோடீஸ்வரர்களான பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று நிகில் காமத் தாம் சம்பாதிப்பதில் சரிபாதியை தானம் செய்து வருகிறார்.
36 வயதான நிகில் காமத் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இவரது சகோதரர் நிதின் காமத் என்பவரின் சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
கடந்த 2010 முதல் தாம் சம்பாதிப்பதில் சரிபாதியை தானமாக அளிக்க உறுதிமொழி எடுத்துள்ள நிகில் காமத், உலக அளவில் இதுபோன்ற உறுதிமொழி எடுத்துள்ள 240 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
சொத்து மதிப்பு ரூ.9000 கோடி
கடந்த 2010ல் காமத் சகோதரர்கள் இணைந்து Zerodha என்ற பங்குச் சந்தை நிறுவனத்தை துவங்கினர். இவர்களின் இந்த பங்கு தரகு நிறுவனம் இந்தியாவில் தரகு சந்தையை தலைகீழாக புரட்டிப்போட்டது.
Zerodha நிறுவனத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10 மில்லியன் கடந்துள்ளது. மட்டுமின்றி, இவர்களது நிறுவனமானது 2000 கோடிக்கு மேல் லாபத்தையும் பதிவு செய்து வருகிறது.
குடும்ப சூழல் காரணமாக 10வது வகுப்புக்கு மேல் பாடசாலை செல்லாத நிகில் காமத், 17வது வயதில் ரூ.8000 ஊதியத்திற்கு கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது நிகில் காமத்தின் சொத்து மதிப்பு ரூ.9000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |