24 வயதில் ரூ 4,300 கோடி சொத்து மதிப்பு... வாய்ப்பை உருவாக்கி சாதித்த இளைஞரின் கதை
பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்ட இரு இளைஞர்கள், தங்கள் நிறுவனத்தின் வருவாயை அடுத்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடிக்கு உயர்த்த திட்டமிட்டு வருகின்றனர்.
வருவாய் இன்றி தத்தளித்த
அமெரிக்காவில் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்ட Aadit Palicha மற்றும் அவரது நெருங்கிய நண்பரான Kaivalya Vohra ஆகிய இருவருமே வாய்ப்பை உருவாக்கி சாதித்தவர்கள்.
19 வயதில் Zepto என்ற நிறுவனத்தை தொடங்கிய இருவரும், தங்களின் 22வது வயதில் ரூ 1200 கோடி மற்றும் ரூ 1,000 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் சமகால இளைஞர்களுக்கு முன்மாதிரியாகினர்.
2021ல் கோவிட் பெருந்தொற்றால் உலக நாடுகள் மொத்தம் முடங்கிக் கிடந்த போது 10 நிமிடங்களில் வீடு தேடிவரும் பொருட்கள் என்ற விளம்பரத்துடன் Zepto நிறுவனத்தை நிறுவினர்.
வருவாய் இன்றி தத்தளித்த தொடக்க நாட்களில் இருந்து, அடுத்த சில மாதங்களில் மில்லியன் கணக்கான டொலர் வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டனர். 2001-ல் பிறந்த ஆதித் பாலிச்சா பில்லியன் டொலர் மதிப்பிலான இந்திய நிறுவனம் ஒன்றின் இளம் வயது தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
Zepto தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ 7400 கோடி என உச்சம் கண்டது. 2023ல் Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்.
வெறும் 22 வயதில்
ஆனால் 2024 ஆகஸ்டு மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில் Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர் என குதித்தது. 340 மில்லியன் டொலர் தொகையை முதலீடாக ஈட்டியதை அடுத்தே, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 பில்லியன் டொலரை எட்டியது.
அத்துடன் 2022ல் வெளியான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வெறும் 22 வயதில் ரூ 1,200 கோடி சொத்து மதிப்புடன் Aadit Palicha இடம்பெற்றார். அவரது பால்ய நண்பரும் Zepto நிறுவனத்தின் இணை நிறுவனருமான Kaivalya Vohra ரூ 1,000 கோடி சொத்து மதிப்புடன் குறித்த பட்டியலில் முதல்முறையாக இடம் பிடித்தார்.
ஆனால், 2025ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ஆதித்தின் சொத்து மதிப்பு ரூ 4,300 கோடி என்றே தெரிய வந்துள்ளது. அதேவேளை Kaivalya Vohra-வின் சொத்து மதிப்பு ரூ 3,600 கோடி என்றே கூறப்படுகிறது.
அடுத்த 18 முதல் 24 மாதங்களில் DMart-ஐ விடவும் Zepto நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க நண்பர்கள் இருவரும் தங்கள் நிர்வாகிகளுடன் இணைந்து திட்டமிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |