18 வயதில் ரூ.55 கோடி வருவாய் ஈட்டிய நபர்... தற்போது அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு
சத்திஸ்கர் மாகாணத்தை சேர்ந்த Yash Jain என்பவர் தமது இளவயதில் தொடங்கிய நிறுவனத்தால் ரூ.55 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளார்.
கோடிகளில் வருவாய்
சத்திஸ்கர் மாகாணத்தை சேர்ந்த Yash Jain தமது நண்பர் ராஜீவ் பிரதாப் என்பவருடன் இணைந்து NimbusPost என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். அபோது யாஷ் ஜெயினுக்கு வயது 18 தான். ஆனால் சில மாதங்களிலேயே கோடிகளில் வருவாய் ஈட்டியுள்ளது இவர்களின் நிறுவனம்.
இன்று இவர்களின் நிறுவனம் ஈ-காமர்ஸ் துறையில் நம்பமுடியாத சாதனையை எட்டியுள்ளது. வலுவான கல்விப் பின்னணி காரணமாகவே, தொழிலில் தாம் வெற்றிப்பெறுவதாக யாஷ் ஜெயின் நம்புகிறார்.
2018ல் தமது நண்பர் ராஜீவ் பிரதாபுடன் இணைந்து NimbusPost என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார் யாஷ் ஜெயின். இவர்களது நிறுவனம் விரைவாக விரிவடைந்து, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக கவனத்தை ஈர்த்தது.
2023 இறுதிக்குள் ரூ.350 கோடி
மட்டுமின்றி, நம்பகமான மற்றும் பயனுள்ள தளவாட தீர்வுகளை வழங்குவதில் இவர்களது நிறுவனம் சாதனை படைத்துள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், 2022ல் NimbusPost நிறுவனம் சுமார் 55 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது.
2023 இறுதிக்குள் ரூ.350 கோடி வருவாய் ஈட்டுவதே இலக்கு என்று யாஷ் ஜெயின் மற்றும் அவரது குழுவினர் உழைத்து வருகின்றனர். NimbusPost நிறுவனம் ஒவ்வொரு நாளும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை முன்னெடுக்கிறது.
மட்டுமின்றி, இவர்கள் FedEx, Delhivery, Blue Dart, Gati, Xpressbees, மற்றும் Shadowfax உள்ளிட்ட நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகின்றனர்.
மேலும், இருநூறுக்கும் மேற்பட்ட திறமையான பொறியாளர்கள் மற்றும் தளவாட நிபுணர்களைக் கொண்ட அர்ப்பணிப்புக் குழு ஒன்று இவர்களுக்கு பக்கபலமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |