ரூ.11,556 கோடி நிறுவனத்தை உருவாக்கிய 22 வயது இளைஞர்... அவரது சொத்து மதிப்பு
கொரோனா பெருந்தொற்று மற்றும் நெருக்கடியின் போது இரு இளைஞர்களால் தொடங்கிய நிறுவனம் தற்போது அசுர வளர்ச்சி பெற்று ரூ.11,556 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.
முதல் தனியார் நிறுவனம்
கடந்த 2021ல் தொடங்கி, 2023ல் சந்தை மதிப்பு 1 பில்லியன் டொலர் தொகையை எட்டும் இந்தியாவின் முதல் தனியார் நிறுவனம் இதுவாகும்.
Aadit Palicha மற்றும் Kaivalya Vohra ஆகிய இரு நண்பர்கள் அமெரிக்காவில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்தியா திரும்பி சொந்தமாக தொழில் தொடங்கினர்.
இணையமூடாக வாடிக்கையாளர்களுக்கு மளிகைப்பொருட்களை விநியோகம் செய்யும் Zepto என்ற இவர்களின் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2022ல் ரூ.7,300 கோடியை கடந்துள்ளது.
அப்போது இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்த Aadit Palicha-வுக்கு வயது 21. உண்மையில் 2021 கொரோனா நெருக்கடி வேளையில் Zepto நிறுவனம் பரவலாக அறியப்படவில்லை.
அதன் பின்னர், அடுத்த சில மாதங்களில் பல கோடிகள் மதிப்பிலான நிறுவனமாக உருமாறியது. 2001ல் மும்பை நகரில் பிறந்தவர் Aadit Palicha. தனது 17 வயதிலேயே GoPool என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
சந்தை மதிப்பு 200 டொலர்
அதன் பின்னர் அமெரிக்காவில் பொறியியல் படிப்பிற்காக சென்றுள்ளார். ஆனால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தமது நண்பருடன் இணைந்து 2021 ஏப்ரல் மாதம் Zepto நிறுவனத்தை தொடங்கினார்.
ஒரே மாதத்தில் Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 டொலர் தொகையை எட்டியது. Zepto நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நிமிடங்களுக்குள் மளிகைப்பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
2022ல் Aadit Palicha-வின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என்றே கூறப்பட்டது. இவரது நண்பரும் இணை நிறுவனருமான Kaivalya Vohra-ன் சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி எனவும் கூறப்பட்டது.
ஆனால் சமீபத்திய முதலீடுகள், இவர்கள் இருவரின் சொத்து மதிப்பை மேலும் அதிகரித்திருக்கலாம் என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |