இளம் வயதில் பெருந்தொகையை லொட்டரியில் வென்ற பிரித்தானிய இளைஞர்: வெளியான துயர சம்பவம்
பிரித்தானியாவில் தேசிய லொட்டரியில் 16 வயதிலேயே பெருந்தொகை பரிசாக வென்ற இளைஞர் திடீரென்று தமது 23ம் வயதில் மரணமடைந்துள்ளார்.
தமது பெற்றோரின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த நிலையிலேயே Callum Fitzpatrick தேசிய லொட்டரியில் 390,000 பவுண்டுகளை பரிசாக வென்றார்.
தமது 17வது வயதில் ஒரு கார் வாங்க வேண்டும் எனவும், manchester united கால்பந்து அணியின் தீவிர ரசிகரான அவர் Old Trafford-ல் தமது அபிமான அணி விளையாடும் போது அதை நேரிடையாக கண்டு களிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
உள்ளூர் கால்பந்து அணியான Ballymartin GAC உறுப்பினரான Callum Fitzpatrick மறைவு தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Belfast பகுதியில் வசித்து வந்த Callum Fitzpatrick செவ்வாய்க்கிழமை அறியப்படாத சூழ்நிலைகளால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருந்தார் Callum Fitzpatrick.
அவரது திடீர் மறைவு, பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை, அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.