முகேஷ் அம்பானி ஆதரவு நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் 23 வயது தொழிலதிபர்: அவரது தொழில்
வெறும் 23 வயதேயான இளம் தொழிலதிபர் ஒருவர் தற்போது பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ஆதரவு நிறுவனத்திற்கு கடும் போட்டியாக வளர்ந்துள்ளார்.
Zepto-வின் இணை நிறுவனர்
மும்பையைச் சேர்ந்த Aadit Palicha என்பவரே தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளார். ஒன்லைன் வணிக தளமான Zepto-வின் இணை நிறுவனரான இவர், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
Zepto நிறுவனம் சமீபத்தில் ரூ 5559 கோடி திரட்டியதை அடுத்து அதன் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 30,101 கோடி என்றே கூறப்படுகிறது. 2025ல் பொதுத்துறை நிறுவனமாக மாற்றவும் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முகேஷ் அம்பானி ஆதரவு நிறுவனமான Dunzo-வுக்கு கடும் போட்டியாக Zepto நிறுவனம் மாறியுள்ளது என்பதே Aadit Palicha நாடு முழுவதும் பேசப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மட்டுமின்றி, Dunzo சமீப மாதங்களாக நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. Dunzo, Zepto போன்ற நிறுவனங்களில் முதலிடத்தில் தற்போது Blinkit உள்ளது. அந்த முதலிடத்திற்கான இடைவெளியை Zepto நிறுவனம் மெல்ல மெல்ல குறைத்தும் வருகிறது.
சொத்து மதிப்பு ரூ 1,200 கோடி
2021 ஏப்ரல் மாதம் Kaivalya Vohra என்பவருடன் இணைந்து Zepto நிறுவனத்தை Aadit Palicha துவங்கியுள்ளார். வெறும் ஒரு மாத காலம் மட்டுமே செயல்பட்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 மில்லியன் டொலராக குதித்தது.
17 வயதில் GoPool என்ற நிறுவனத்தை தொடங்கிய Aadit Palicha அதில் தோல்வி கண்டார். இதனையடுத்து Stanford பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு சேர்ந்தார்.
ஆனால் பாதியில் அந்த படிப்பையும் கைவிட்டு நாடு திரும்பிய Aadit Palicha தமது இலக்குகளில் ஒன்றான வணிகத்துறையில் களமிறங்கினார். Aadit Palicha-வின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 1,200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |