ஆதரவற்ற முதியோருக்காக வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி கொடுத்த இளைஞர்கள்.., மதுரையில் நெகிழ்ச்சி
ஆதரவற்ற முதியோருக்காக வங்கியில் கடன் வாங்கி இளைஞர்கள் வீடு கட்டி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நெகிழ்ச்சி
தமிழக மாவட்டமான மதுரை, திருநகரில் ‘திருநகர் பக்கம்’ என்ற இளைஞர் அமைப்பினர் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்களை மீட்டு தங்களது சேமிப்பு பணம் மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதியை வைத்து தனியார் வாடகைக் கட்டிடத்தில் அவர்களை தங்கவைத்து உணவு ஆகியவற்றை வழங்கினர்.
இவர்களின் சமூக பணியை பாராட்டி ஆட்சியரே பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாடகை கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்களுக்கு புதிதாக கட்டடம் கட்டி புதுமனைப் புகுவிழா நடத்தியுள்ளனர். இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் பேசுகையில், "எங்களுடைய இல்லத்தில் 25 ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்கிறோம்.
அவர்கள் தங்கும் வீட்டு வாடகை ரூ.30 ஆயிரம் கொடுத்து வந்தோம். ஆனால், வீட்டின் உரிமையாளர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் தங்க விடுவதில்லை.
இதனால், ரூ.92 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் இடத்தை, ரூ.50 லட்சம் வங்கிக் கடன் பெற்று வாங்கினோம். மீதி பணத்தை குடும்பத்தினர், மக்கள், தனியார் நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக பெற்று, ரூ.80 லட்சத்தில் கட்டிடம் கட்டினோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |