உன் தந்தை ஒரு கொலைகாரன்... லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் வீட்டின் முன் பதாகைகளுடன் குவிந்த மக்கள்
லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’உன் தந்தை ஒரு கொலைகாரன்’ என்று கூறும் பதாகைகளுடன் கோபக்குரல் எழுப்பியபடி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ள Polina Kovaleva (26) என்னும் அந்த இளம்பெண், ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Lavrovஇன் வளர்ப்பு மகள். வேறு வகையில் கூறினால், Polinaவின் தாயுடன் சுமார் 20 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறாராம் ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Lavrov.
Polina கென்சிங்டனிலுள்ள 4.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான மாளிகை ஒன்றில் வாழ்ந்துவருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக Polinaவின் தாயாகிய Svetlana Polyakova (51)உடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Lavrov முறையற்ற உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. Lavrovஇன் செல்வாக்கை Polina பயன்படுத்திக்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவேதான் Polinaவின் வீட்டின் முன், ’ரஷ்ய போர்க்குற்றவாளியாகிய Sergei Lavrovஇன் மகள் Polina அவரது பணத்துடன் இங்கு ஆடம்பரமாக வாழ்கிறார்’ என்று கூறும் பதாகைகளுடன் ஒரு கூட்டம் மக்கள் திரண்டார்கள்.
இதற்கிடையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் Polina மற்றும் அவரது தாயாகிய Svetlana ஆகியோர் மீதும் தடைகள் விதிக்குமாறு அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த Svetlanaவும் ஒரு சாதாரண செல்வந்தர் மட்டும் இல்லை, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் செல்வாக்குமிக்க ஒரு உறுப்பினர் என்று கடந்த ஆண்டில் விசாரணை மேற்கொண்ட குற்றவியல் விசாரணை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.