ட்ரம்பின் பேத்திக்கு புரபோஸ் செய்ய அவரது வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்
ட்ரம்பின் பேத்திக்கு புரபோஸ் செய்வதற்காக, அவரது வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் பேத்திக்கு புரபோஸ் செய்ய...
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர்.
டொனால்ட் ஜூனியருக்கும் வானஸ்ஸா என்னும் பெண்ணுக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் காய் மேடிசன் ட்ரம்ப் (Kai Madison Trump, 18). பின்னர் வானஸ்ஸாவை விவாகரத்து செய்துவிட்டார் டொனால்ட் ஜூனியர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5.00 மணியளவில், ஃப்ளோரிடாவிலுள்ள ட்ரம்புக்கு சொந்தமான ஆடம்பர இல்லமான Mar-a-Lagoவின் காம்பவுண்ட் சுவரில் ஒரு இளைஞர் ஏறிய ஆண்டனி (Anthony Thomas Reyes, 23) என்னும் இளைஞரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில், ட்ரம்பின் பேத்தியான காயிடம் புரபோஸ் செய்வதற்காக அவர் ட்ரம்பின் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆண்டனி காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விடயம் என்னவென்றால், ஆண்டனி ட்ரம்பின் வீட்டுக்குள் நுழைய முயலும்போது அங்கு காயும் இல்லை, ட்ரம்பும் இல்லை.
காய் விடுமுறையை செலவிடுவதற்காக பஹாமாஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |