பிரித்தானியாவில் திரைப்பட மாணவர் படுகொலை: 27 வயது இளைஞர் கைது
இங்கிலாந்தில் பகுதியில் திரைப்பட மாணவர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே
நியூஸிலாந்தின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மைக்கேல் செரேஸினின் பேரன் Finbar Sullivan, வடக்கு லண்டனில் சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்டார்.
துணை மருத்துவர்களும், பொதுமக்களும் அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றனர்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Finbar-யின் நண்பர் என்று கருதப்படும் மற்றொரு இளைஞரும் கத்திக் குத்து காயங்களுக்கு ஆளானார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொலை வழக்குப்பதிவு
கடந்த 7ஆம் திகதி பிரபல சுற்றுலாத் தலமான ப்ரிம்ரோஸ் ஹில்-யில் 21 வயதான Finbar Sullivan கொல்லப்பட்டதையடுத்து, இளைஞர் ஒருவர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் 27 வயதான Oliuwadamilola Ogunyankinnu என்பது தெரிய வந்தது. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று அவர் Stratford Magistrates நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.
அவருக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பின்னர் எவ்வித மேல் நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |