லண்டனில் நள்ளிரவு நேரத்தில் பூங்காவில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான இளம்பெண்! சம்பவ இடத்தின் புகைப்படங்கள்
லண்டனில் டீன் ஏஜ் பெண்ணை பூங்காவில் வைத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இசில்வொர்த்தில் உள்ள தோர்ன்பரி பூங்காவில் தான் இந்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணிக்கு நடந்துள்ளது.
அங்கு டீன் ஏஜ் சிறுமி ஒருவரை இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறான். இது தொடர்பான புகாரின் பேரில் குற்றவாளியை பொலிசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் 21 வயதான இளைஞனை பொலிசார் கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் மே மாதம் மேலதிக விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவி மற்றும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் சம்பவம் நடந்த இடத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.