அவுஸ்திரேலியாவில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன குழந்தை உயிரிழப்பு: 23 வயது இளைஞர் கைது
23 year old youth arrested in tasmania: அவுஸ்திரேலியாவில் இரண்டு வாரக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் இரண்டு வாரக் குழந்தை உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆண் குழந்தை
கடந்த 5ஆம் திகதி அன்று, டாஸ்மேனியாவில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து Herdsmans Cove என்ற பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விரிவான விசாரணைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
குழந்தையின் மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இளைஞர் ஹோபார்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குழந்தையின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு டாஸ்மேனியா காவல்துறை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.