CSK தோற்றதை கேலி செய்தவர் மீது தாக்குதல்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் CSK அணி தோல்வியுற்றதை கிண்டல் செய்த ரசிகர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார்.
CSK தோல்வி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
பெங்களூரு அணி நிர்ணயித்த 197 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 146 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
CSK அணியின் தோல்வியால் இரு அணி ரசிகர்கள் இடையே வார்த்தை மோதல் மைதானத்திற்கு வெளியே இருந்தது.
கிண்டல் செய்தவர் மீது கடும் தாக்குதல்
இந்நிலையில், சென்னை அணி தோல்வியுற்றதை ஜீவ ரத்தினம் என்பவர் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஒரு கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பாக அப்பு, ஜெகதீஷ் உட்பட 7 பேரை துரைப்பாக்கம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |