சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தூக்கில் தொங்கியபடி இளைஞரின் உடல் மீட்பு
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரின் முடிவு
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தின் (Kolkata's Eden Gardens) கே பிளாக்கில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
உயிரிழந்தவர், மைதானத்தின் ஊழியரான கணேஷ் சந்திர பாரிக் என்பவரின் மகன் தனஞ்சய் பாரிக் (21) என அடையாளம் காணப்பட்டார்.
இன்று காலை 8 மணியளவில் இளைஞர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். பின்னர், இதுகுறித்து கொல்கத்தா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் எனவும் கொல்கத்தா பொலிஸார் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |