காதலித்த பெண்ணையே கட்டாயப்படுத்தி திருமணம்! உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்..சிக்கிய கடிதம்
தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கட்டாய திருமணத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (27). இவர் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.
அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்க, ராதாகிருஷ்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ராதாகிருஷ்ணனுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் திடீரென தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தனக்கு கட்டாயத்திருமணம் செய்து விட்டார்கள் என பெண்ணின் உறவினர்களின் பெயர்களை ராதாகிருஷ்ணன் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |