லண்டன் ரயில் நிலையத்தில் இரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்: தெரிய வந்த பகீர் பின்னணி
லண்டன் ரயில் நிலையத்தில் குறுக்கு வில்லால் தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவரை பொலிசார் மீட்டுள்ளனர்.
தலைநகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அபே வூட் ரயில் நிலையத்தில் இருந்து பொலிசாருக்கு அவசர அழைப்பு சென்றுள்ளது.
உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளதை கண்டனர்.
குறித்த இளைஞர் குறுக்கு வில் மூலம் சுடப்பட்டு அடிவயிற்றில் பலத்த காயம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை செய்தித் தொடர்பாளர், அனைத்து அம்சங்களையும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றார்.
நேற்றிரவு நடந்த இச்சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த இளைஞர் இதுவரை ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என்றே கூறப்படுகிறது.
பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தும், இதுவரை எவரும் கைதாகவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.45 முதல் 10.20 மணிக்குள் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறும் பொலிசார்,
சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.