லண்டன் பேருந்தில் நள்ளிரவு மூன்று பேரால் 18 வயது இளைஞருக்கு நேர்ந்த நிலை! புகைப்படங்கள்
லண்டன் பேருந்தில் 18 வயது இளைஞன் நள்ளிரவில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான முக்கிய சிசிடிவி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற இச்சசம்பவம் தொடர்பிலான புதிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி அன்றைய தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் Ealing பொலிசார் N207 பேருந்துக்குள் சென்றனர்.
அங்கு 18 வயது இளைஞர் கத்தி குத்து காயங்களுடன் கிடக்க முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிசார் கூறுகின்றனர்.
அந்த இளைஞரை பேருந்துக்குள் அணுகிய மூவர் கத்தியால் குத்தியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய மூவரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் நேற்று வெளியிட்டனர்.
அவர்களை அடையாளம் கண்டு பேசி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பொலிசார் பொதுமக்கள் அதற்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.