லண்டனில் தகாத தொழிலில் ஈடுபடும் பெண்ணின் வீட்டுக்கு சென்று பொருளை திருடிய நபர்: நீதிமன்றம் தந்த தண்டனை
லண்டனில் தகாத தொழிலில் ஈடுபடும் பெண்ணின் வீட்டுக்கு சென்ற இளைஞன் அவரிடம் இருந்த பொருளை கொள்ளையடித்து ஓடிய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Hertfordshireஐ சேர்ந்தவர் முகமது ரஷிக் (19). இவர் கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் திகதி வடக்கு லண்டனில் உள்ள குறித்த பெண்ணுக்கு போன் செய்து அவரை சந்திக்க வருவதாக கூறியிருக்கிறார்.
அதன்படி நள்ளிரவு 11.50 மணிக்கு அப்பெண் வீட்டுக்கு வந்த ரஷிக், கையில் பெரிய கத்தியுடன் உள்ளே நுழைந்தார்.
பின்னர் அங்கிருந்த பொருட்களை அவர் திருட முயன்ற போது உடனிருந்த ஆண் ஒருவர் பொலிசுக்கு போன் செய்தார்.
இதனால் பயந்து போன ரஷிக், விலை உயர்ந்த செல்போனை அவரிடம் இருந்து திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர். ரஷிக் போன் செய்து பேசிய செல்போன் நம்பரை வைத்து அவரை கைது செய்தனர்.
முதலில் தன் மீதான குற்றத்தை மறுத்த ரஷிக் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி ரஷிக்குக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கும் அணியை சேர்ந்த காவல்துறை அதிகாரி பென் கூறுகையில், இது அந்த இளம்பெண் மீது நடத்தப்பட்ட பயமுறுத்தும் தாக்குதல் ஆகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைச் சமாளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், குற்றவாளிகளை குறிவைக்க அயராது உழைக்கிறோம்.
லண்டனில் எல்லா பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என கூறியுள்ளார்.