காதலியை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு..ரயில் முன் பாய்ந்த இளைஞர்
தமிழக மாவட்டம் விருதுநகரில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால், இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (20). இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.
மூர்த்தி பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். அதனை தனது வீட்டில் கூறி திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆனால், அவர் காதலித்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி, மூர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மூர்த்தி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். ரயில் தண்டவாளத்திற்கு சென்ற அவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |