கேள்வி கேட்ட அப்பாவை இரும்புக்கம்பியால் தாக்கி கொன்ற மகன்!
இந்தியாவின் மும்பை நகரில் தந்தையை இரும்புக் கம்பியால் மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணம்
அந்தேரி பகுதியைச் சேர்ந்த 53 வயது முதியவர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த நபரின் 24 வயது மகனே கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
தனது தந்தை திட்டியதால் கோபத்தில் இருந்த குறித்த இளைஞர் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு சென்றுள்ளார். அதில் படுகாயம் அடைந்த அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |