தாயின் துப்பாக்கியைக் கொண்டு மாணவர் அரங்கேற்றிய பயங்கரம்! இருவர் உயிரிழப்பு..கொந்தளித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 வயது இளைஞர் துப்பாக்கிச்சூடு
புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் 20 வயது மாணவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குறித்த மாணவரை சுட்டுப்பிடித்து காவலில் எடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவரின் பெயர் ஃபீனிக்ஸ் இக்னர் என்றும், அவர் உள்ளூர் ஷெரிஃப் துணைத் தலைவரான தனது தாயின் துப்பாக்கியை எடுத்துவந்து இந்த பயங்கரத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
மாணவர்கள் அல்ல
உயிரிழந்த இருவரும் அந்த பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல என புளோரிடா மாகாண பல்கலைக்கழக காவல்துறைத் தலைவர் ஜேசன் ட்ரம்போவர் கூறினார்.
மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் காவலில் எடுக்கப்பட்ட ஃபீனிக்ஸ் இக்னர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "துப்பாக்கிகள் சுடுவதில்லை, மனிதர்கள்தான் சுடுகிறார்கள்" என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |