சொந்த ஊருக்கு திரும்பிய இளம் விஞ்ஞானி..24 வயதில் தூக்கிட்டு தற்கொலை
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளம் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
இளம் விஞ்ஞானி
கர்நாடக மாநிலம் ஆர்யபு கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (24). ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்பிய பாரத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
நேற்று முன்தினம் பாரத்திடம் அவரது அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து அறிந்த பொலிஸார் பாரத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின் முடிவில் பாரத்தின் தற்கொலை குறித்து பொலிஸார் கூறுகையில், 2 மாதங்களாக தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்த பாரத், கடந்த வாரம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உயர் அதிகாரியுடன் போனில் பேசிய பின்னர் மன உளைச்சலில் இருந்த பாரத் அன்று இரவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளனர்.
iStock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |