மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்.., விஜய் பார்த்த ஒரு பார்வையில் நிர்வாகிகள் செய்தது என்ன?
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்த போது அவருடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
விஜய் ஆறுதல்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்
அப்போது, பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் அப்போது செல்ஃபி எடுத்தார். இதனை பார்த்த விஜய் சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தார்.
பின்னர், விஜய் எதுவும் கூறாத நிலையில் நிர்வாகிகள் சுதாரித்து கொண்டு அந்த இளைஞரை பார்த்து செல்ஃபி எடுக்கும் நேரமா இது, மனசாட்சி இல்லையா தம்பி என்று கேட்டனர்.
இதையடுத்து இளைஞர் ‛செல்பி' எடுப்பதை நிறுத்தினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |