இந்தியரின் வாழ்வை மாற்றிய இணையம்.. தான் உருவாக்கிய செயலியை ரூ.416 கோடிக்கு விற்று அசத்தல்
இந்தியர் ஒருவர் இணையத்தின் உதவியால் தான் உருவாக்கிய மெசேஜ் செயலியை ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
தொழில்நுட்பம் பலருக்கும் நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கிறது. அந்தவகையில், இணையத்தின் மூலம் பல திறன்களை கற்றுக்கொண்ட இந்தியர் ஒருவர் தனது கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் தொழிலதிபராக மாறி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
இவர், தான் தொடங்கிய நிறுவனத்தை வேர்ட்பிரஸின் (Word Press) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிடம் ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான அசாம் திப்ரூகார் பகுதியைச் சேர்ந்தவர் கிஷான். இவர், Texts.com என்ற புதுமையான மெசேஜ் செயலியை உருவாக்கினார்.
இந்த செயலியானது பல்வேறு மெசேஜ் செயலிகளை பராமரிக்கும் தளமாக செயல்படும் வகையில் உள்ளது.
மேலும், இந்த செயலியானது WhatsApp, Instagram, Twitter (X), Telegram என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே interface -ன் கீழ் கொண்டுவருகிறது.
இதனை நாம் எதிர்காலத்தில் கூடுதல் Upgrades செய்து கொள்ளலாம். இந்த செயலியானது ஆட்டோமெட்டிக் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் மேட் முலன்வெக்கின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக தான் உருவாக்கிய Texts.com செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமெட்டிக் நிறுவனத்திடம் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.416 கோடி) கிஷான் விற்பனை செய்தார்.
பகாரியா திபுரூகாரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் 8 - வகுப்பு வரை படித்த கிஷான், அதே ஊரில் உள்ள அக்ரசென் அகாடமியில் 9 மற்றும் 10ம் வகுப்பை நிறைவு செய்தார்.
பின்னர், கல்லூரிக்கு செல்லாமல் இணையம் மூலம் பல திறன்களை பெற்று தன்னுடைய அறிவை வளர்த்துக்கொண்டார். அதிலும் இவர் படித்த பல ஒன்லைன் வகுப்புகள் இணையத்தில் இலவசமாக கிடைத்தவை ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |