ஐஸ்கட்டி அருகே போட்டோ எடுத்த இளைஞர் ஆற்றில் அடித்துச் சென்று மரணம்
ஐஸ்கட்டி அருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த நபர் ஆற்றில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் மரணம்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (28). இவர் ஜவுளிக்கடை அதிபராக உள்ளார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது அங்குள்ள பனிமலையின் மீது ஏறி சாகசம் மேற்கொண்டுள்ளார். ஐஸ்கட்டியாக உறைந்து காணப்பட்ட சந்திரா ஆற்றங்கரையில் நின்று நிகில் குமார் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால், நிகில் குமாரின் எடையை தாங்க முடியாமல் அவர் நின்று கொண்டிருந்த ஐஸ்கட்டி நொறுங்கி விழுந்தது. பின்னர் அவர் நண்பர்களின் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, சம்பவம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நிகில் குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கடுமையான குளிர் காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர், சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நிகில் குமார் தவறி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |