விசாவுக்கு 42 லட்சம்! பல சடலங்களை கண்டோம்..அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்கள் கண்ணீர்
அமெரிக்கவில் சட்டவிரோதமாக குடியேறியதால், ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் அதிர்ச்சி தகவல்களையும், வேதனையையும் பகிர்ந்துள்ளனர்.
வெளியேற்ற அதிரடி உத்தரவு
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, உரிய ஆவணமின்றி குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திருப்பி அனுப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியர்கள் 104 பேர் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அமிர்தசரஸில் அவர்கள் வந்த விமானம் தரையிறங்கியது. அவர்கள் பஞ்சாப், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
வேலைக்கான விசா
வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் கூறும்போது, ரூ.42 லட்சம் கொடுத்து வேலைக்கான விசா பெற முயன்றுள்ளார்.
ஆனால் கடைசி நிமிடத்தில் விசா அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் டெல்லியிலிருந்து கத்தார் சென்று, அங்கிருந்து பிரேசில் நாட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் கொலம்பியா, பனாமாவுக்கு டாக்சி மூலம் சென்ற அவர், நடந்தே மெக்சிகோ எல்லைக்கு படகில் பயணித்தபோது, தன்னுடன் வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.
தாராப்பூரைச் சேர்ந்த சுப்பால்சிங் என்பவர் கூறும்போது, 15 மணிநேரம் கடல் பயணம் செய்து, பின்னர் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட மலைகள் வழியாக 45 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் பயணத்தின்போது வழியில் பலர் சடலங்களை கண்டதாகவும் கூறி அதிர வைத்தார். ஆகாஸ்திப்சிங் என்பவர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ.60 லட்சம் வரை கொடுத்து ஏஜெண்டுகளிடம் ஏமாந்ததாக வேதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், விசாரணை முடிவில் சட்டவிரோதமாக இளைஞர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜெண்டுகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |