YouTube-ல் இனி 'Dislike' இருக்காது! ஒன்லைன் துன்புறுத்தலை தடுக்க புதிய அம்சம் அறிமுகம்
டிஸ்லைக் மூலம் படைப்பாளிகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்க YouTube நிறுவனம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மற்ற சமூக ஊடக தளங்களைப் போலவே, இணையதளம் முழுவதிலும் உள்ள வீடியோக்களில் டிஸ்லைக் எண்ணிக்கையை (Dislike Counts) அகற்ற YouTube அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது.
புதிய படைப்பாளிகள் டிஸ்லைக் தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதை YouTube நிறுவனம் கவனித்தபோது இது கவலைக்குரிய விடயமாக மாறியது. இந்த மாற்றத்தை அறிவிக்க YouTube நிறுவனம் ட்விட்டரை பயன்படுத்திக்கொண்டது.
நவம்பர் 10-ஆம் திகதி, TeamYouTube அதன் ட்விட்டர் பக்கத்தில், "குறிவைக்கப்பட்டு Dislike செய்யப்படுவதையும் மற்றும் படைப்பாளிகள் மீதான அவற்றின் தாக்கத்தை குறைக்க (உதாரணமாக சிறிய படைப்பாளிகள்), யூடியூப்பில் இன்று முதல் டிஸ்லைக் எண்ணிக்கை பொதுவாக அனைவரும் பார்க்கும்படி இருக்காது (லைக் பொத்தான் தொடர்ந்து இருக்கும்). பல ஆராய்ச்சி, சோதனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளது.
To reduce targeted dislike attacks & their impact on creators (esp on smaller creators), you’ll no longer see a public dislike *count* on YouTube starting today (the dislike button is staying).
— TeamYouTube (@TeamYouTube) November 10, 2021
This comes after lots of research, testing & consideration → https://t.co/mJWDJSSRoG
அடிப்படையில், YouTube நிறுவனம் Dislike பொத்தானை அகற்றவில்லை. பயனர்கள் விரும்பினால் வீடியோவை dislike செய்ய முடியும், அவர்களால் அதன் எண்ணிக்கையை தான் பார்க்க முடியாது டிஸ்லைக் எண்ணிக்கை தனிப்பட்ட கருத்துகளாக மட்டுமே படைப்பாளர்களுக்குத் தெரியும்.
YouTube நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பொது வெளியில் ஏற்படும் அவமானம் மற்றும் துன்புறுத்தலைத் தடுக்க உதவும் என்று கூறுகிறது நவம்பர் 10 புதன்கிழமை முதல் இணையதளம் முழுவதும் இதை படிப்படியாக மாற்ற யூடியூப் திட்டமிட்டுள்ளது.
யூடியூப் மட்டும் அல்ல, Facebook மற்றும் Instagram ஆகியவை மனநலம் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்க உதவுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் பயனர்களுக்கு hide option-ஐ அறிமுகப்படுத்தியது.
ஓன்லைன் துன்புறுத்தலில் இருந்து படைப்பாளர்களைப் பாதுகாக்க எடுக்கும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று YouTube நிறுவனம் கூறுகிறது.